ஏஜென்னில் வியாழனன்று 42 வயதுடைய நபரொருவர் அவரது நான்கு மனைவி, பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் மீது வன்முறையை பிரயோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஐவோரியனை சேர்ந்த இந்த நபர், தனது மனைவி மீதான பாலியல் அத்துமீறல்கள், அவரது 2 வயது குழந்தைகளில் இருவரை சித்திரவதை மற்றும் காட்டுமிராண்டித்தனமான வன்முறையை பிரயோகித்தமை, அத்துடன் அவரது அனைத்து குழந்தைகள் மற்றும் அவரது ஏனைய மூன்று மனைவிகள் மீதும் மேற்கொண்ட வன்முறைச் செயல்களுக்காக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இவருடைய வன்முறைச் செயல்களில் இருந்து தப்பி ஓடிய அவருடைய மனைவி ஒருவரிடமிருந்தே இந்த தகவல்கள் வெளியானது” என்று துணை அரசு வழக்கறிஞர் ஃபிராங்க் டிடியர் AFP இடம் கூறினார், அந்த நபர் செவ்வாய்கிழமை காவலில் கொண்டுவரப்பட்டு விசாரணைகளின் பின்னர் வியாழக்கிழமை காவலில் வைக்கப்பட்டார்.

“குடும்பத்திற்குள் வன்முறையின் வலுவான கட்டமைப்பை” விவரித்த துணை வழக்கறிஞர், “அவர்கள் ஒரு பெரிய கட்டிடத்தில், பரிதாபகரமான சூழ்நிலையில் வாழ்ந்தனர்” என்று கூறினார். மேலும் சிறார்களுக்கு எதிரான வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட வன்முறை மற்றும் குற்றங்களைப் பற்றி உரிய நேரத்தில் புகாரளிக்கத் தவறியதற்காக மூன்று பெண்களும் குற்றம் சாட்டப்பட்டு நீதித்துறை மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டனர்.

குற்றவாளி தனது மனைவி மற்றும் ஏனைய மூன்று மனைவிகளுடன் பெற்ற 28 குழந்தைகளில் 27 பேரின் தந்தை ஆவார், ஒருவர் மட்டுமே குறித்த தாயின் முதல் கணவரின் பிள்ளையாவார். பிள்ளைகளில் மூன்று பேர் இப்போது பெரியவர்கள். ஏனைய அனைத்து சிறார்களும் சமூகநல சேவைகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.