ஈஸ்ட்டர் விடுமுறை ஆரம்பித்துள்ளதை அடுத்து, வீதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணி அளவில் Ile-de-France இன் வெளிச்செல்லும் வீதிகளில் 300 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது.

இன்று நண்பகலில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துள்ளதாகவும், இரவு 10 மணி வரை வீதி நெருக்கடி நீடிக்கும் எனவும் வீதி கண்காணிப்பு நிறுவனமான Bison Futé அறிவித்துள்ளது.