தொடருந்தின் இரண்டு பெட்டிகளுக்கு இடையே பயணம் செய்த இளைஞன் ஒருவன் தொடருந்துக்குள் சிக்குண்டு கொல்லப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை மார்செ (Marseille) நகரில் இடம்பெற்றுள்ளது. அன்று காலை இளைஞன் ஒருவன் மெற்றோ தொடருந்து ஒன்றின் இரு பெட்டிகளை இணைக்கும் பகுதியில் நின்றுகொண்டு மிக ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளான். Timone மற்றும் Blancarde எனும் சிறு நகரங்களுக்கிடையே பயணித்த அவன், திடீரென தொடருந்துக்குள் விழுந்து உடல் நசுங்கி கொல்லப்பட்டுள்ளான்.
La Blancarde மெற்றோ நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. காலை 9.15 மணிக்கு அவனது சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டது.
கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்த காவல்துறையினர், நடந்த சம்பவத்தை அறிந்து கொண்டனர்.
கொல்லப்பட்ட இளைஞன் மிக ஆபத்தான, தடை செய்யப்பட்ட பகுதியில் ஏறி நின்று பயணித்ததாக தெரிவித்தனர்.