இம்மானுவல் மக்ரோன் மீண்டும் வெற்றிபெற்றால் தாம் பதவி விலகுவதாக பிரதமர் Jean Castex இன்று வெள்ளிக்கிழமை காலை அறிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வரும் ஞாயிறு இடம்பெறும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் இம்மானுவல் மக்ரோன் அபாரமான வெற்றியை பெறுவார் என நான் நம்புகிறேன். அவ்வாறு மக்ரோன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டால், அடுத்தடுத்த நாட்களில் நான் எனது பதவியை விட்டு விலகுவேன். புதிய பிரதமரின் தலைமையின் கீழ் அரசு இயங்கும்!” என தெரிவித்தார்.
‘ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னான சட்டமன்ற தேர்தலின் போது புதிய உத்வேகம் ஒன்று ஏற்படும்’ என தாம் நம்புவதாகவும் பிரதமர் Jean Castex தெரிவித்தார்.