வாக்களிக்காதோர் எண்ணிக்கை
2017 ஆம் ஆண்டை விட உயர்ந்தது

பிரான்ஸின் அதிபர் தேர்தலின் முதற்
சுற்றில் மாலை ஐந்து மணி வரை நாடு முழுவதும் 65 சத வீதமான வாக்குகளே
பதிவாகியுள்ளன என்று அறிவிக்கப்படு
கிறது. கடந்த தேர்தலில் இதே நேரம் பதிவான வாக்குகள் 69.42% வீதம் ஆகும். ஏழு மணிக்கு வாக்களிப்பு நிறைவடை
யும் சமயத்தில் வாக்களிக்காதோர்
எண்ணிக்கை 26.5 வீதமாக இருக்கும்
என்று மதிப்பிடப்படுகிறது. கடந்த 2017
தேர்தலில் அது 19.98 வீதமாக இருந்தது.

அண்மைய தேர்தல்களில் வாக்களிக்கா
தோரது வீதம் வருமாறு :

•19.98% - 2017
• 18.63% - 2012
• 14.67% - 2007
• 27.16% - 2002

நாட்டின் பல பகுதிகளிலும் காணப்பட்ட
மழை மற்றும் பனிக் காலநிலை தணிந்து
வெயில் நிலவுவதால் வாக்களிப்பு சுறு
சுறுப்பாக நடைபெற்றுள்ள போதிலும்
வாக்களிக்காதவர்களது வீதம் 2002 ஆம்
ஆண்டுக்குப் பின் மிக உச்ச அளவைக் காட்டியிருக்கிறது.

பாரிஸ் நகரப் பகுதியில் பதிவான வாக்கு
களின் வீதம் 52.17% ஆகும். வெளிநாட்ட
வர்கள் மற்றும் அகதிகள் அதிகமாக வசி
க்கின்ற புறநகரான Seine-Saint-Denis மாவ
ட்டத்தில் 51.71%வீத வாக்குகளே பதிவாகி
யுள்ளன. அதிக வீதமானோர் வாக்களிப்
பதைத் தவிர்த்துள்ளதால் தேர்தல் பெறு
பேறுகள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகப் புதிராக இருக்கலாம் என்று அவதானிகள்
கருதுகின்றனர். இறுதி முடிவு இன்னும்
சிறிது நேரத்தில் - இரவு எட்டு மணிக்கு
அறிவிக்கப்படும்.