டிஜிட்டல் உலகில் நடக்கும் சில சம்பவங்
களைக் கட்டுப்படுத்தப் பழைய சட்டங்க
ளில் விதிகள் இல்லை. பிரான்ஸில் 48.7 மில்லியன் வாக்காளர்கள் அதிபர் தேர்த
லுக்கான முதலாவது சுற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை வாக்களிக்கிறார்கள்.
வாக்களிப்பதைப் பலரும் சமூகவலைத்
தளங்களில் பகிர விரும்புகிறார்கள். 

இளம் வாக்காளர்கள் இந்த ஜனநாயகக்
கடமையை செல்ஃபி, ஸனப்சற், இன்ஸ்ர
கிராம் வீடியோக்களாகப் பதிவு செய்ய விரும்புவது வாக்களிப்பு நிலையங்க
ளில் கடமை புரிவோருக்குச் சிரமங்களை
ஏற்படுத்துகிறது. முன்னர் உள்ளூராட்சித்
தேர்தல்கள் நடந்த சமயத்தில் வாக்குப் 
போடுவதை செல்ஃபி எடுப்பது தடுக்கப்
பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு
எதிராக சோசல் மீடியா போராட்டங்களும்
வெடித்திருந்தன.

தேர்தல் சட்டம் என்ன சொல்கிறது?

செல்ஃபி எடுப்பதை தேர்தல் சட்டம் தடுக்
கவில்லை. ஆனால் அது"வாக்குச் சீட்டு
ரகசியமானது" என்ற விதிக்கு எதிராக
வருகிறது. வாக்களிப்பு நிலையம் செல்
லும் ஒருவர் யாருக்கு வாக்களிப்பது என்
பதைச் சீட்டில் தெரிவு செய்து வாக்கை அதற்கான உறையில் வைக்கும் கருமம்
மூடிய தனி அறைக்குள்ளேயே நடக்கிறது
அது ரகசியமாகச்செய்யப்படவேண்டியது
அதனை எவரும் படம் எடுக்க முடியாது.
ஆனால் வாக்கை எடுத்து வந்து அலுவல
ர்கள் முன்பாகப் பெட்டிக்குள் செலுத்துகி
ன்ற கடமையில் ரகசியம் பேணப்படவே
ண்டியது அவசியம் அல்ல. அந்தக் கட
மையை ஒருவர் படம் எடுக்க விரும்ப
லாம்.

வாக்களிப்பு நிலையங்களுக்குப் பொறுப்
பான அதிகாரிகள்,"வாக்குச் சீட்டு ரகசிய
மானது"என்ற விதியின் கீழ் படம் அல்லது
செல்ஃபி எடுப்பதைத் தடுக்க முடியும்.
2014 இல் இந்த விவகாரம் குறித்து அப்போதைய உள்துறை அமைச்சரிடம்
கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
"செல்ஃபி தடைசெய்யப்படவில்லை. ஆனால் அதற்கு ஊக்கமளிக்க விரும்ப
வில்லை" என்று கூறியிருந்தார்.

வாக்களிப்பு நாளில் வாக்களிப்பு நிலை
யத்துக்குள் குறிப்பிட்ட வேட்பாளர் ஒரு
வருக்கு ஆதரவைத் தெரிவிப்பது போன்ற பிரசாரங்கள் சட்டத்தில் தடை
செய்யப்பட்டுள்ளன.செல்ஃபி எடுக்கும்
ஒருவர் தனது வேட்பாளருக்கான பிரசார
மாக அதனைப் பயன்படுத்த வாய்ப்பு
உள்ளது என்ற நோக்கில் படங்கள், வீடியோ எடுப்பதை அதிகாரிகள் தடுக்க
முடியும்.

வாக்களிப்பு இன்று காலை பாரிஸ் நேரம் எட்டு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மாலை ஏழு மணிக்கு அது நிறைவடை
யும். இறுதிப் பெறுபேறு சரியாக இரவு
எட்டு மணிக்கு தொலைக்காட்சிகள் மற்
றும் செய்தி ஊடகங்களில் வெளியாகும்.
களத்தில் உள்ள 12 வேட்பாளர்களில் எவ
ருமே 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை
பெறாவிடில் ஆகக் கூடிய வாக்குகளைப்
பெற்ற முதல் இருவர் இரண்டாவது சுற்
றுக்குத் தெரிவாகுவர். இரண்டாவது
சுற்று வாக்களிப்பு எதிர்வரும் 24 ஆம்
திகதி நடைபெறும்.