சோசலிஸக் கட்சியின் முன்னாள் அதிபராகிய பிரான்ஷூவா ஹொலன்ட் ஏப்ரல் 24 தேர்தலில் மக்ரோனுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.”எங்கள் எதிர்காலத்துக்கு மிகவும் ஆபத்தானவர்களது கைகளில் நாடு வீழ்வதைத் தடுக்க வேண்டியது மிக முக்கியமானது “-என்று அவர் தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோசியும் தனது வாக்கை மக்ரோனுக்கே செலுத்தப்போவதாக அறிவித்திருப்பதுதெரிந்ததே. முதற் சுற்றில் மூன்றாம் இடத்தை வென்ற ஜோன் லூக் மெலன் சோனின் ஆதரவாளர்களது வாக்குகளே இறுதிச் சுற்றில் வெற்றியைத் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.