பிரான்சில் 140 மில்லியன் மரங்கள் நாட்டுவதாக மக்ரோன் உறுதியளித்துள்ளார். 

இன்று ஏப்ரல் 16, சனிக்கிழமை Marseille இல் தனது தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட மக்ரோன், அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்ணிலையில் இதனை அவர் அறிவித்தார். ‘2030 ஆம் ஆண்டினை இலக்கு வைத்து பிரான்சில் 140 மில்லியன் மரங்கள் நாட்டப்படும்!’ என மக்ரோன் உறுதியளித்தார்.  

அண்மையில், தலைநகர் பரிசில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் சுவற்றில் இரண்டாம் சுற்று தேர்தலுக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அதையடுத்து, மாணவர்கள் இந்த சுவரொட்டிகளுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேற்படி சுவரொட்டியில் ‘மக்ரோனா அல்லது மரீன் லு பென்னா?’ என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இருவரும் சுற்றுசூழல் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாதவர்கள் எனவும், அது தொடர்பாக எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், இந்த கருத்துக்கு பதில் கூறும் வகையில் மக்ரோன் இந்த உறுதியினை வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.