ஆசிய, பசுபிக்கில் அமெரிக்காவை
பின்பற்றிச் செல்லப்போவதில்லை!!
சர்வதேச செய்தியாளர் மத்தியில்
வெளிவிவகாரக் கொள்கையை
விவரித்து மரின் லூ பென் உரை
உக்ரைன் போர் முடிவடைந்ததும் ரஷ்யா
வுக்கும் நேட்டோவுக்கும் இடையே ஒரு
மூலோபாய ரீதியான இணக்கப்பாட்டை
ஏற்படுத்த முயற்சிப்போம். அதேசமயம்
நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் (NATO integrated command) இருந்து பிரெஞ்சுப் படைகளை வெளியே
ற்றுவது என்ற முடிவில் மிக உறுதியாக இருக்கிறோம்.
மொஸ்கோவுடன் பணிந்து போகப்போ
வதும் இல்லை. அதேசமயம் ஆசிய-பசு
பிக் பிராந்தியத்தில் பைடன் நிர்வாகத்
தைப் பின்தொடரப்போவதும் இல்லை.
தீவிர வலது சாரி வேட்பாளரான மரின்
லூ பென் அம்மையார் நேற்றுப் பாரிஸில்
நூற்றுக்கணக்கான வெளிநாட்டுச் செய்
தியாளர்கள் பங்குபற்றிய ஒரு மாநாட்டில்
இவ்வாறு அறிவித்தார். ஏப்ரல் 24 ஆம்
திகதி நடைபெறவுள்ள இறுதிக்கட்ட வாக்
களிப்பில் லூ பென் அம்மையார் மக்ரோ
னைத் தோற்கடிக்கக் கூடும் என்ற எதிர்
பார்ப்பு வலுப் பெற்று வருகிறது. பிரான்
ஸில் மட்டுமன்றி முழு ஐரோப்பாவிலுமே
அவரது வெற்றி வாய்ப்புக் குறித்த அரசி
யல் பரபரப்புக் காணப்படுகிறது. இந்த
நிலையில் தனது வெளிவிவகாரக் கொள்கைகளை வெளியிட்டிருக்கும் அவர், தனது பழைய தீவிர ஐரோப்பிய எதிர்ப்பு வாதத்தைச் சற்றுத் தணித்திருக்
கிறார்.
ஈரோ நாணய முறையை ஒழித்து ஐரோப்
பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸை வெளியேற்றப் போவதாக கடந்த காலங்
களில் முழங்கி வந்தவர் மரீன் லூ பென்.
இப்போது அவற்றைக் கைவிட்டுள்ளார்.
ஐரோப்பாவுக்கு எதிராக எவரும் இல்லை.
ஐரோப்பிய ஒன்றியத் துக்கான பிரான்
ஸின் பங்களிப்புகளை நாங்கள் நிறுத்த
மாட்டோம். அது எமது நோக்கமல்ல என்று
அவர் கூறியிருக்கிறார்.
சர்வதேச விவகாரங்களிலோ அல்லது
அரசாங்க நிர்வாகத்திலோ முன் அனுப
வம் இல்லாதவர் மரின் லூ பென்.அதே
சமயம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை
நீண்டகாலமாகப் புகழ்ந்துபேசி வருபவர்.
ஆனால் உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் அவர் தனது ரஷ்ய சார்பு நிலை
யைத் தவிர்த்துவிட்டுப் போரில் தன்னை நடுநிலையாளர் போலக் காட்டும் கருத்
துக்களைத் தற்போது வெளியிட்டு வரு
கிறார். 2017 தேர்தல் வாக்களிப்பு சமயத்
தில் அவரை புடின் கிரெம்ளின் மாளிகை
க்கு அழைத்துப் பேசியிருந்தார். புதிய
உலக ஒழுங்கு ஒன்றை உருவாக்குவது
என்ற புடினின் எண்ணத்தைத் தானும் அதே பெறுமானத்துடன் மதிப்பாக அச் சமயத்தில் லூ பென் தெரிவித்திருந்தார்.
மக்ரோனுக்கு ஹொலன்ட் ஆதரவு
இதேவேளை, சோசலிஸக் கட்சியின் முன்னாள் அதிபராகிய பிரான்ஷூவா ஹொலன்ட் ஏப்ரல் 24 தேர்தலில் மக்ரோ
னுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்
திருக்கிறார்."எங்கள் எதிர்காலத்துக்கு
மிகவும் ஆபத்தானவர்களது கைகளில்
நாடு வீழ்வதைத் தடுக்க வேண்டியது மிக
முக்கியமானது "-என்று அவர் தொலைக்
காட்சி ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோசி
யும் தனது வாக்கை மக்ரோனுக்கே செலுத்தப்போவதாக அறிவித்திருப்பது
தெரிந்ததே. முதற் சுற்றில் மூன்றாம்
இடத்தை வென்ற ஜோன் லூக் மெலன்
சோனின் ஆதரவாளர்களது வாக்குகளே
இறுதிச் சுற்றில் வெற்றியைத் தீர்மானிப்
பதில் அதிக செல்வாக்குச் செலுத்தும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.