ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்புக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், இன்று புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் படி, தற்போது ஜனாதிபதியாக உள்ள இம்மானுவல் மக்ரோன் 55.5% வீத வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என தெரியவந்துள்ளது. அதேவேளை, அவரை எதிர்த்து போட்டியிடும் மரீன் லு பென் 44.5% வீத வாக்குகளைப் பெற்று போட்டியில் இருந்து வெளியேறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மக்ரோன் மற்றும் மரீன் லு பென் ஆகிய இருவருக்கும் இடையில் மிக நெருக்கமான வாக்கு வீதம் இருந்த நிலையில், தற்போது இந்த நெருக்கம் தளர்ந்துள்ளது.

Ipsos Sopra/Steria barometer ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்படி கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தது