பிரான்சில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதை பொது சுகாதாரத் துறை உறுதி செய்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அரசு எந்த வித கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா தொற்று மற்றும் சாவு விபரங்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 132,114 பேருக்கு இந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் 22,113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். (வெள்ளிக்கிழமை 22,066 பேர் சிகிச்சை பெற்று வந்திருந்தனர்)

அவசர சிகிச்சைப் பிரிவில் 1,523 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். (வெள்ளிக்கிழாஇ 1,537 பேர் சிகிச்சை பெற்று வந்திருந்தனர்)

அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 58 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றினால் 142,475 பேர் சாவடைந்துள்ளனர்.