பிரான்ஸில் தமிழர்கள் அதிகமாக வாங்கும் சில பொருட்களுக்கு கடைகளில் தட்டுபாடு நிலவுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.வழமையாக வாங்கும் கடைகள் தவிர பெரிய கடைகளில் கூட தட்டுபாடாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோதுமை,சூரியகாந்தி எண்ணெய் உட்பட சில பொருட்களுகே தட்டுபாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைன்-ரஷ்ய போர் சூழல் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.இந்நிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.ஐரோப்பாவில் அதிகரிக்கும் பொருளாதார நலிவு,மக்களை பாதிக்க தொடங்கியிருக்கின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் தமிழர்கள் சிலர்,கடந்த இரு வாரங்களாகவே இத்தட்டுபாடு இருந்து வந்துள்ளதாக தெரிவித்தனர்.மேலும் சிலர் சூரியகாந்தி எண்ணெக்கு பதிலாக ஓலிவ் எண்ணெய் வாங்கி சென்றதாகவும் தெரிவித்தனர்.