பொதுமக்கள் வானொலிச் சேவையான ராடியோ பிரோன்ஸ் (Radio France) குழுமம் தங்களது ரஸ்ய ஊடகவியளாளர்களுடனான அனைத்துச் செய்திப் பரிமாற்றங்களையும் இடைநிறுத்தி அவர்களைப் புறக்கணித்துள்ளது.

உக்ரைன் போர் தொடர்பான 'போலிச் செய்திகளை' பரப்பும் ஊடகவியலாளர்களிற்குச் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற தீர்மானம் ரஸ்ய அரசால் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு உறுதியாக்கப்பட்ட நிலையில் இந்தப் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ராடியோ பிரோன்ஸ் குழுமத்தில் France Inter, Franceinfo ஆகிய வானொலிச் சேவைகளும் உள்ளன. இவர்கள் அனைவரும் ரஸ்ய ஊடகவியலாளர்களைப் புறக்கணித்துள்ளது.

 

இவர்கள் ரஸ்ய ஊடகவியலாளர்களைப் புறக்கணித்திருக்கும் நிலையில் ரஸ்யா தொடர்பான செய்திகளை எங்கிருந்து பெறப் போகின்றார்கள்? 

 

உக்ரைன் வழங்கும் பிரச்சாரச் செய்திகளை மட்டும் தான் இவர்கள் ஒலிபரப்பப் போகின்றார்களா?