ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான Marine Le Pen மற்றும் Eric Zemmour ஆகியோர் பயன்படுத்தும் சில டுவிட்டர் (twitter) கணக்குகள் முடக்கப்பட்டன.
நேற்று வெள்ளிக்கிழமை இந்த கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. Marine Le Pen மற்றும் Eric Zemmour ஆகிய இருவரும் பிரச்சார நோக்கில் பயன்படுத்திவரும் அவர்களது சில டுவிட்டர் கணக்குகள் ஒருமணிநேரத்துக்கும் மேலாக நேற்று முடக்கப்பட்டுள்ளது. இருவரும் உடனடியாக இந்த செயலுக்கு விளக்கம் கேட்டு, கண்டனமும் வெளியிட்டனர்.
இதில், Eric Zemmour இன் தரப்பில் Generation Z மற்றும் ZemmourTV போன்ற கணக்குகளும், மரீன்-லூ-பென் தரப்பில் அவரது துணை இயக்குனர் Jean-Philippe Tanguy உள்ளிட்ட அவரது பிரச்சார அணியினரது கணக்குகளும் முடக்கப்பட்டிருந்தன.
அதையடுத்து, மேற்குறித்த இரு தலைவர்களது ஆதரவாளர்களும் #StopCensorship எனும் குறியீட்டு வார்த்தையை பயன்படுத்தி தங்களது எதிர்ப்பினை டுவிட்டரில் பதிவு செய்தனர்.
டுவிட்டர் தரப்பு ஒருமணிநேரத்தில் கணக்குகளை மீள செயற்படுத்தியதுடன், இச்சம்பவம் ‘தவறுதலாக’ இடம்பெற்றதாகவும் பதிலளித்துள்ளது.