​இன்று பிரான்ஸ் முழுவதும் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பிலுள்ள உக்ரைனிற்கு ஆதரவாகப் பிரான்ஸ் முழுவதும் பேரணிகள் நடந்துள்ளன.


 

இந்தப் பேரணிகளில் பிரான்ஸ் முழுவதும் 41.600 பேர் கலந்து கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

எந்தவிதமான வன்முறைகளும் இன்றி இந்தப் பேரணிகளும் ஒன்று கூடல்களும் நடந்துள்ளன.

 


இந்த உக்ரைன் ஆதரவுப் போராட்டத்தில் பரிசில் மட்டும் 16.000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

 

இது கடந்த சனிக்கிழமையை விட மிக அதிகம் என உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.