ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனிற்கு ஆயுதம் வழங்குவதை ஜனாதிபதி வேட்பாளர் மரின் லூப்பன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
«ஆயுதங்களை அதிகரிப்பதால் என்றுமே போர் ஓய்ந்து விடாது. உக்ரைன் மக்களின் வீரத்தால் கூட போர் சமநிலைக்கு வந்த விடாது. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் மேலதிக ஆயுதத்தாலும் கூட என்றுமே போர் சமநிலைக்கு வந்துவிடாது»
«இரு தரப்புடனும் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதன் மூலமே எதனையும் சாதிக்க முடியும்»
என தேசியப் பேரணிக் கட்சியான Rassemblement National இன் தலைவியும் ஜனாதிபதி வேட்பாளருமான மரின் லூப்பன் தெரிவித்துள்ளார்.