நாளை சனிக்கிழக்கிழமை முதல் Île-de-France இன் நெடுஞ்சாலை போக்குவரத்து விதிகள் மாறுதலுக்கு உள்ளாகிறது. இங்கு பலத்த சுற்றுச்சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி, நாளை மார்ச் 26 ஆம் திகதி முதல், A86 நெடுஞ்சாலையில் - ஒரு சில பிரிவுக்குட்பட்ட வானங்கள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக Crit-Air ஒட்டிகள் (Stickers) கொண்ட வாகங்களில் 0-1-2 ஆகிய மூன்று வகைக்குட்பட்ட வாகனங்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
ஏனைய (3-4-5 வகை) வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை முதல் தினமும் காலை 5.30 மணியில் இருந்து அன்று நள்ளிரவு 12.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
அதேவேளை, Île-de-France இற்குள் உள்ள அனைத்து வீதிகளிலும் அதிகபட்ச வேகம் 20 கி.மீ இனால் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு வீதியின் வழக்கமான அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கி.மீ என்றால், அது 70 கி.மீ வேகமாக மட்டுப்படுத்தப்படுகிறது.
அதேவேளை, நாளை முதல் ‘anti-pollution’ எனும் சிறப்பு பயணச்சிட்டையும் விற்பனைக்கு வருகிறது. இதன்படி, €3.80 யூரோக்கள் மதிப்புள்ள பயணச்சிட்டை ஒன்றை நீங்கள் பெற்றுக்கொண்டால், பொதுப்போக்குவரத்துக்கள் அனைத்தையும் ஒரு நாள் முழுவதும் எல்லை இன்றி பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் நாளை சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு ஆரம்பித்து - மறு அறிவுப்பு வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.