​அதிநவீன ஏவுகணை ஒன்றை பிரான்ஸ் பரிசோதனையிட்டுள்ளது.


ASMPA என அழைக்கப்படும் நவீன அணு ஏவுகணை ஒன்றையே பிரான்ஸ் பரிசோதித்துள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை பிரான்சின் தென்மேற்கு பிராந்தியமான Cazaux இல் உள்ள இராணுவ தளத்தில் இருந்து இந்த ஏவுகணையை இயக்கியுள்ளது. அணு குண்டு பொருத்தப்படாத, வெற்று ஏவுகணை ஒன்றையே பரிசோதித்துள்ளது
ASMPA என்பது பிரான்ஸ் 2009 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வரும் ஏவுகணையாகும். இதனை தற்போது பிரான்சின் ஆயுத உற்பத்தி நிறுவனம் ஒன்று நவீனமயப்படுத்தி, மீள உருவாக்கியுள்ளது. 2035 ஆம் ஆண்டில் இருந்து பிரான்சின் இராணுவத்தில் இணைக்கப்பட உள்ள இந்த நவீன ஏவுகணையையே தற்போது பிரான்ஸ் பரிசோதித்துள்ளது.


இதனை அறிக்கை ஒன்றின் மூலமாக இராணுவ அமைச்சர் Florence Parly தெரிவித்துள்ளார். ‘பரிசோதனை வெற்றியளித்துள்ளது. இது மிக மகிழ்ச்சியான தருணம்!’ எனவும் அவர் தெரிவித்தார்.

இரஷ்யா-உக்ரைன் யுத்தம் முழு மூச்சாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், பிரான்ஸ் தனது நவீன ஏவுகணையை பரிசோதித்துள்ளமை உலக நாடுகளால் கவனிப்புக்குள்ளாகியுள்ளன