பிரான்சில் அகதிகளாக வந்தடைந்த உக்ரேனியர்கள், தங்கள் உறவுகளுக்கு அழைப்பதற்காக சில சிறப்பு வசதிகளை Free மற்றும் SFR தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

இதன்படி, எல்லையற்ற தொலைபேசி அழைப்புகளைம் (appels illimités) 10 GB வரையான இலவச Data-வினையும் வழங்க உள்ளது. மேற்குறித்த இரண்டு நிறுவனங்களும் இந்த வசதியினை வழங்குகிறது. உக்ரைனில் இருந்து பல மில்லியன் மக்கள் போலந்துக்கு இடம்பெயர்ந்துள்ளதை அடுத்து, போலந்து நாட்டுக்கும் இந்த விசேட வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வசதியினை பெற்றுக்கொள்ள அருகில் உள்ள Free, SFR தொலைத்தொடர்பு நிறுவனங்களின் காரியாலயத்துக்குச் சென்று, உக்ரைன் கடவுச் சீட்டினை ஆதாரமாக சமர்பித்து ‘ரீலோட் அட்டையினை’ பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது