கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊடக பேச்சாளர் Gabriel Attal இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போது, கொரோனா தொற்று உறுதியாகி தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து தங்களது வாக்குகளைச் செலுத்த முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தொற்றுக்குள்ளானானவர்கள் முகக்கவசங்கள் அணிந்து வாக்குச் சாவடிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.