218,000 கொரோனாத் தடுப்பூசிகளை பிரான்ஸ் அழித்து, மண்ணுக்குள் புதைத்துள்ளது.
பிரெஞ்சு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் இது தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 240 மில்லியன் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன எனவும், இதில் 218,000 தடுப்பூசிகளை பிரான்ஸ் அழித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கான காலாவதி திகதி நிறைவடைந்ததை அடுத்து, அவை உடைக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் அழிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் AstraZeneca தடுப்பூசிகள் ஆகும்.
பிரான்சில் இதுவரை 54.26 மில்லியன் பேர் தங்களுக்கான முதலாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். 39.5 மில்லியன் பேர் தங்களது மூன்றாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். பல மில்லியன் பேர் தடுப்பூசி போட காத்திருக்கும் நிலையில், 6பிரான்சில் 218,000 தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளமை விமர்சனங்களைச் ஏற்படுத்தியுள்ளது