உக்ரேனிய அகதிகளுக்கு ஒரு மில்லியன் யூரோக்கள் உதவியினை பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இத்தகவலை பரிஸ் நகர முதல்வர் Anne Hidalgo அறிவித்துள்ளார். உக்ரைனியில் இருந்து அதன் அருகில் உள்ள நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து சென்றவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன. அவர்களுக்கு தஞ்சம் அளித்துள்ள விடுதிகள், தங்குமிடங்களுக்கான கட்டணம் மற்றும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இந்த உதவித்தொகையில் வழங்கப்பட உள்ளன.
‘உக்ரைனில் தங்கியுள்ள பரிசைச் சேர்ந்த குடும்பத்தினர் 39 75 எனும் இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் உக்ரைனில் உள்ள அல்லது அங்கிருந்து வெளியேறியவர்களுக்கான உதவியினை கோர முடியும்!’ என பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.