பிரான்ஸ் 550 இராணுவத்தினரை ருமேனியாவில் தரையிறக்கியுள்ளது.

நேற்று மார்ச் 1 ஆம் திகதி இந்த தரையிறக்கம் இடம்பெற்றுள்ளது. Bouches-du-Rhône இல் உள்ள Istres இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் 550 வரையான இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர். NATO அமைப்பின் ஒரு அங்கமாக இவர்கள் ‘எல்லை பாதுகாப்புக்காக’ ருமேனியாவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படுவது இந்த குழாமின் நோக்கமில்லை எனவும், மாறாக ஐரோப்பிய எல்லைகளை பாதுகாப்பதே எங்கள் முதல் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இது முதல்கட்ட நடவடிக்கை எனவும், இன்னும் மேலதிகமாக இராணுவத்தினர் அனுப்பப்பட்டு எல்லை இறுக்கமாக பாதுகாக்கப்படும் எனவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.