காவல்துறை அதிகாரி ஒருவரை மகிழுந்து மூலம் இடித்துத்தள்ளிய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

திங்கட்கிழமை இச்சம்பவம் Chelles (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு la brigade anticriminalité (BAC) ஆக பணிபுரியும் அதிகாரி ஒருவர் வீதி கடவை ஒன்றில் வீதியினை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது வீதியில் மகிழுந்தை செலுத்திக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் காவல்துறை அதிகாரிக்கு வழிவிட்டு, மகிழுந்தை நிறுத்தியுள்ளான்.

ஆனால் சம்பவம் அத்தோடு முடிவடையவில்லை. காவல்துறை அதிகாரி வீதியை கடக்கும் போது, மீண்டும் மகிழுந்தை இயக்கிய இளைஞன், வேகமாகச் சென்று காவல்துறை அதிகாரியை இடித்து தள்ளியுள்ளான்.

இச்சம்பவத்தில் காவல்துறை அதிகாரி தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வீதியை கடப்பது காவல்துறை அதிகாரி என அறிந்துகொண்டதன் பின்னர் வேண்டுமென்றே இந்த தாக்குதலை இளைஞன் நடத்தியுள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய இளைஞன் (21) உடனடியாக கைது செய்யப்பட்டான். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன