இரஷ்யா எங்களுக்கு எதிரி நாடு இல்லை. அவர்களுடன் நாங்க போரிடவில்லை என அரச ஊடக பேசாள்ர் Gabriel Attal தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் உக்ரைனின் பக்கம் நிற்கின்றோம். நாங்கள் மனிதாபிமான முறையில் உக்ரைன் மக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குகிறோம்!” என தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் எந்த ஒரு நாட்டையும் கோபப்படுத்தவில்லை. யுத்தத்தை பிற நாடுகளுக்கு பரவச் செய்ய முயற்சிக்கவில்லை. அதிக குண்டுகளை வீசச் செய்யவில்லை. குறிப்பாக இரஷ்யா எங்களுக்கு எதிரி நாடு இல்லை. அவர்களுடன் நாங்கள் போரிடவும் இல்லை! போர் நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்!” எனவும் தெளிவு படுத்தினார்.