இரஷ்யா-உக்ரைன் யுத்தத்தினால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

G7 மற்றும் NATO நாடுகளுக்கிடையேயான சந்திப்பு நேற்றைய தினம் (மார்ச் 24) இடம்பெற்றிருந்தது. அதில் கலந்துகொண்ட மக்ரோன், மேற்படி தகவலை தெரிவித்தார். “நாங்கள் மிக கடினமான ஒரு உணவுப் பஞ்சத்துக்குள் நுழைகிறோம்!” என தெரிவித்த மக்ரோன், அதற்கு மாற்று வழிகள் கொண்ட திட்டம் ஒன்றையும் மாநாட்டின் போது முன்வைத்தார்.

“இந்த நெருக்கடியான காலத்தில், உணவுப் பஞ்சம் ஏற்படுவதையும், அதன் விலைகள் அதிகரிப்பை எதிர்கொள்ளவும் ‘அவசரகால’ திட்டம் ஒன்றை செயற்படுத்தவேண்டும்!” என மக்ரோன் தெரிவித்தார்.

இந்த உணவு பஞ்சத்தினால் வட ஆபிரிக்கா, எகிப், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பாதிப்புக்குள்ளாகும் எனவும் மக்ரோன் தெரிவித்தார்.