ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்ற உள்ளார்.
இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி ஊடாக நாட்டு மக்களுக்கு மக்ரோன் உரையாற்ற உள்ளார். இந்த உரையில் பிரதானமாக இரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்பான தகவல்களையும், பிரான்சின் நிலைப்பாடு குறித்தும் மக்ரோன் அறிவிப்பார் என அறிய முடிகிறது.
உக்ரைன் மீது இன்று ஆறாவது நாளாக இரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக மக்ரோன் பெருமளவில் ஈடுபாடு காட்டி வருகின்றார். உக்ரைனில் கடந்த இரு நாட்களாக நிலமை மோசமடைந்து வருவதை அடுத்து மக்ரோனின் இந்த உரை மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது