மார்செய் நகரின் மாநகரசபை முன்றலில் மாநகரசபைக் காவற்துறை அதிகாரி மீது இன்று காலை கத்திக்குத்துத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

 
தக்குதலாளி மீது மற்றைய காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தாக்குதலாளி கொல்லப்பட்டுள்ளான்.
 
இன்று காலை 9h00 மணியளவில் மாநகரபசபை முன்றலில்  மூன்று மாநகரசபைக் காவற்துறையினர்  சென்று கொண்டிருந்த போது அதில் ஒருவர் மீது திடீரென் இந்த நபர் கத்திக் குத்துத் தாக்குதல் நடாத்தி உள்ளார்.
 
மற்றைய காவற்துறையினர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டதில் தாக்குதலாளி கொல்லப்பட மற்றைய காவற்துறை அதிகாரி காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார்.
 
மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன