Bois de Vincennes பூங்காவில் இருந்து துப்பாக்கிகள் சில மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.50 மணி அளவில் இந்த ஆயுதங்கல் தொழிலாளி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. Bois de Vincennes பூங்காவின் வெளிப்புறமான Montemart வீதியில் நகரசபை துப்பரவு தொழிலாளி ஒருவர், துப்பரவு பணியில் ஈடுபட்டிருக்கும் போது, பொதி ஒன்று வீதியின் அருகே இருப்பதை பார்த்துள்ளார்.

அதை மீட்ட அவர், அதற்குள் துப்பாக்கிகள் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர்.

ஒரு இயந்திர துப்பாக்கியும், ஐந்து கைத்துப்பாக்கிகளும் மேலும் ஒரு தானியங்கி துப்பாக்கியும் பைக்குள் இருந்துள்ளது. அவை காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இந்த ஆயுதங்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.