நேற்று நள்ளிரவு அளவில் கிரனோபிளில் உள்ள ஒரு அடுக்குமாடி வீடு ஒன்றில் ஐந்து உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு தாயும் அவரது நான்கு பிள்ளைகளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 
முதற்கட்டத் தகவல்களின் படி நான்கு பிள்ளைகளையும் கொலை செய்து விட்டுத் தாயும் தற்கொலை செய்துள்ளார் எனவும் மிகவும் ஆபத்தான மருந்துகளை இவர்கள் உட்கொண்டுள்ளார்கள் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்தப் பிள்ளைகள் 3 வயதிலிருந்து 12 வயதுடையவர்கள் எனவும், அடுத்த வீட்டில் அசாதராணமான துர்நாற்றம் வீசியதையடுத்து அயலவர்கள் வழங்கிய தகவலை அடுத்தே இந்த உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.