ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் மீண்டும் உரையாடியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை காலை அவர் தொலைபேசியூடான உரையாடியிருந்ததாக அறிய முடிகிறது. இந்த உரையாடலின் போது ‘உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு மக்ரோன் கோரியிருந்தார்.
ஆனால் இந்த கோரிக்கையை விளாடிமிர் புட்டின் நிராகரித்துள்ளதாக எலிசே மாளிகையில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கிறது.
இன்று எட்டாவது நாளாக இரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் இருந்து இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். போரை நிறுத்துமாறு மக்ரோன் பல தடவைகள் இரஷ்யாவிடம் கோரியிருந்த நிலையில், இன்று மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது