எதிர்வரும் 14ம் திகதியுடன் இதுவரை கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்ற இடங்களிற்கு கட்டாய முக்கக் கவச ஆணை நீக்கப்படுகின்றது.
தொழில் மையங்கள், நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் போன்ற அனைத்து இடங்களிற்கும் உட்பகுதிகளிலும் மார்ச் 14ம் திகதி முதல் முகக்கவசம் அணியத் தேவையில்லை.
அத்துடன் கட்டாய தடுப்பு ஊசி அனுமதிச் சான்றிதழானpass vaccinal மார்ச் 14ம் திகதியுடன் இரத்துச் செய்யப்படுகின்றது.
ஆனால் வைத்தியசாலைகள், மருத்துவ மையங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றிற்கு தொடர்ந்தும் pass vaccinal கட்டாயம் ஆகின்றது.
அவசர சிகிச்சையில் 1500 இற்கு குறைந்த நோயாளிகள் வரும் வரை இந்த கட்டாய தடுப்பு ஊசி அனுமதிச் சான்றிதழ் அமுலில் இருக்கும்.
இந்த அறிவித்தல்களை பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் இன்று அறிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட இதுவரை முக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் முக்கக்வசம் அணியத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் பொதுப் போக்குவரத்துகளில் மட்டும் இன்னமும் முகக்கவசம் கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார்.