இம்மானுவல் மக்ரோன் இன்று வியாழக்கிழமை தம்மை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க உள்ளார்.
பல மாதங்களாக எழுப்பப்பட்டு வந்த கேள்வி, இன்று மாலையுடன் நிறைவுக்கு வருகின்றது. ஜனாதிபதி 2022 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறமை தொடர்பாக மக்ரோன் கடந்த சில மாதங்களாக மெளனம் சாதித்து வந்திருந்தார். இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மாலை தம்மை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க உள்ளார்.
‘பிரெஞ்சு மக்களுக்கான கடிதம்’ (Lettre aux Français) எனும் தலைப்பில் ஒரு கடிதம் ஒன்றை இன்று மாலை வெளியிட உள்ளார். அதில் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அறிவிக்க உள்ளார்.
இணையத்தளமூடாக இந்த கடிதம் வெளியாகும்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் மார்ச் 4 ஆம் திகதிக்குள் தங்களது பெயரினை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும், இணைக்கப்படும் போது அவர்களுக்கு 500 இற்கும் மேற்பட்ட நிதி வழங்குனர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை இறுதி நாளில் தமது பெயரினை மக்ரோன் இணைத்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.