ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து பெற்றோல் மற்றும் டீசல் லிட்டரிற்கு 15 சதங்கள் குறைக்கப்படும் என பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் அறிவித்துள்மை போதாது என்றும், இது பிழையான நடவடிக்கை என்றும், டுய குசயnஉந iளெழரஅளைந கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோன்-லுக் மெலோன்சோனின் தேர்தற் பிரச்சாரக் குழுவின் இயக்குனர் மனுவல் பொம்பார் விமர்சித்துள்ளார்.
«பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருட்களை லிட்டரிற்கு 1€40 என கட்டணத்தை நிர்ணயம் செய்து அதை அந்த நிலையிலேயே உறுதிப்படுத்தி உறைநிலைக்குக் கொண்டுவரவேண்டும்»
என ஜோன்-லுக் மெலோன்சோனின் தேர்தற் பிரச்சாரக் குழுவின் இயக்குனர் மனுவல் பொம்பார் ஊடகச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.