ஈஃபிள் கோபுரத்தின் உயரம் அதிகரிக்கப்பட உள்ளது.

மார்ச் 15 ஆம் திகதி ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் ஆறு மீற்றர் உயரம் கொண்ட புதிய அன்ரனா (antenna) ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதையடுத்து தற்போது 324 மீற்றர் உயரம் கொண்ட ஈஃபிள் கோபுரம், 330 மீற்றராக உயர உள்ளது.

DAB (Digital Audio Broadcast) அலைவரிசைக்காக இந்த புதிய அன்ரனா அமைக்கப்பட உள்ளது.

முன்னதாக, ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் 1959 ஆம் வருடம் அன்ரனா ஒன்று அமைக்கப்பட்டு வானொலி சேவைகளுக்காக முதன்முறை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.