ஈபில் டவர் மீது ஏவுகணை தாக்கும் காணொளி! ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை! பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவரை ஏவுகணை தாக்குதல் நடைபெறுவது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை பாதுகாப்புத்துறை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனில் ரஷ்ய 17 வது நாளாக தனது போர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் தலைநகர் ,கீவ்வை சுற்றி வளைத்து ரஷ்யா வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று மக்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்குமிங்கும் தெறித்து ஓடுவது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் உக்ரைன் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
அதில் இறுதியாக ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்த தகவலில், ஐரோப்பிய நாடுகளின் தலைநகரில் இந்த நிலைமை ஏற்படுவதை நினைத்து பாருங்கள்! இதனைப் போன்று நடைபெறக் கூடாது என்று தான் நாங்கள் நினைக்கிறோம்….

அதனால் தயவு செய்து உக்ரைன் வான் எல்லையை மூடுங்கள் அல்லது எங்களுக்கு எதிர்த்துப் போராட போர் விமானங்களை அனுப்பி வையுங்கள் நாங்கள் விழுந்தால் நீங்களும் விழுந்ததாக அர்த்தம் என அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவரின் அருகில் நின்று இளம்பெண் ஒருவர் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கும்பொழுது திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் நிலை குலைந்து விழுவது போன்ற கட்டிடங்கள் இடிந்து விழுவது போன்று,

செய்யப்பட்ட இந்த கிராபிக்ஸ் காட்சிகள் உக்ரைன் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது.இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையதளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.