பிரான்ஸில் யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளரால் கோரப்படவில்லை! எனவே அந்த தொகை மாநிலப் பொக்கிஷங்களுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது! ஜனவரி 21 அன்று அறிவிக்கப்பட்ட யூரோ மில்லியன்ஸ் டிக்கெட்களின் தொகை குறித்த வெற்றியாளரால் கோரப்படவில்லை.
இரண்டு மாத காலம் ஆகியும், வெற்றியாளர் இந்த தொகையை பெறாததால் 1 மில்லியன் யூரோக்கள் அரசுக்கு சொந்தமானது.8 வாரங்களுக்கு முன்பு, வெற்றி பெற்ற குறியீடு மூலம், 100 பேர் யூரோ மில்லியன்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டதால், தலா 1 மில்லியன் யூரோக்கள் பிரித்து கொடுக்கப்பட்டது.
அவர்களில், 28 நபர் பிரெஞ்சுக்காரர்கள். அவர்களில் ஒருவரைத் தவிர, அனைவரும் தங்கள் வெற்றி தொகையை பெற்றனர்.Aude (Occitanie) இல் தனது டிக்கெட்டை வாங்கிய இந்த வெற்றியாளர், தொகையை பெற வரவில்லை. அவரைக் கண்டுபிடிக்க , Française des jeux (FDJ) ஒரு தேடல் அறிவிப்பைத் தொடங்கும் அளவுக்குச் சென்றது.
அவர் வருவார் என்ற நம்பிக்கையில் அவரது டிக்கெட்டின் எண்களை திரைகளில் ஒளிபரப்பினார். ஆனால், குறித்த நபர் வரவில்லை. ஆனால், இப்போது காலக்கெடு முடிந்துவிட்டது. இந்த தொகை இனி அவருக்கு கிடைக்காது மற்றும் வெற்றியாளருக்கு தனது பரிசைப் பெற உரிமை இல்லை. இந்த தொகை அரசுக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது.