யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Viry-Châtillon ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா கந்தையா அவர்கள் தனது நூறு வயதில் காலமாகியுள்ளார்.13 MAR 1921 பிறந்த இவர் – 22 FEB 2022ல் காலமாகியுள்ளார்..(100 வயது)
தற்போதைய சூழலில் நூறு வயது வரை வாழ்வது என்பது மிகப்பெரிய சாதனை,ஆனாலும் எமது முன்னோர்கள் இலகுவாக எந்த நோய் நொடியுமின்றி நூறு வயது வரை வாழ்ந்து வந்துள்ளனர்.
அதிகாலை துயில் எழுதல்,உடல் உழைப்பு,சிறப்பான உணவு பழக்கவழக்கங்கள்,நேர்த்தியான சிந்தனை மனநிலை,ஆன்மீக ஒழுக்கம் என அவர்கள் ஒரு ஒழுங்கில் வாழ்ந்து தமது வாழ்வை நெறிப்படுத்தியுள்ளனர்.
துரதிஷ்டவசமாக அவர்களின் பின்னரான அடுதடுத்த தலைமுறைகள் இழக்ககூடாத அவர்களின் சொத்துகளை (படிப்பினைகள் வாழ்க்கை முறைகளை) இழந்துள்ளனர்.இந்த பாட்டி சரி இப்படி ஆங்குமிங்கும் இருப்பவர்களின் வாழ்க்கை முறைகள் அவர்களோடு அழிந்து போகவிடாமல் Document செய்து பாதுகாக்க வேண்டும்..இதன் மூலம் எமது அடுதடுத்த சந்ததிகள் மட்டுமல்லாமல் பிரான்ஸ் மக்களும் பயனடைவார்கள்..