பிரான்ஸ் உட்பட ஐரோப்பா முழுவதும் நிலவ உள்ள உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.
‘அடுத்த 12-18 மாதங்களில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் உணவு தடுப்பாடு ஏற்படும். உக்ரைன் இரஷ்யா யுத்ததத்தின் எதிரொலியாக இந்த நிலை ஏற்படும்!’ என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இரு நாட்கள் இடம்பெற்ற ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான போர்க்கால மாநாட்டு, நேற்று மாலை முடிவுக்கு வந்தது. அதையடுத்து மக்ரோன் ஊடக சந்திப்பில் ஈடுபட்டார். அதன்போதே மேற்படி தகவலை அவர் வெளியிட்டார்.
அதேவேளை, ஆப்பிரிக்க நாடுகளிலும் உணவுப்பஞ்சம் ஏற்படும் எனவும் மக்ரோன் தெரிவித்திருந்தார்.