ஆங்கிலக்கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற அகதிகள் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மீட்ப்புப்பணி நேற்று வியாழக்கிழமை அதிகாலை பா-து-கலே மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Boulogne-sur-mer துறைமுகத்தில் இருந்து ஆங்கிலக்கால்வாய் ஊடாக சிறிய மீன்பிடி படகுகளில் அகதிகள் பலர் பயணித்துள்ளனர். பிரித்தானியா நோக்கிய அவர்களது சட்டவிரோத பயணம், பிரெஞ்சு கடற்படை அதிகாரிகளால் பாதியில் நிறுத்தப்பட்டது.
மொத்தமாக நான்கு படகுகளில் 202 பேர் பயணித்ததாகவும், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் இருந்து அகதிகளின் கடல்வழிப் பயணங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டில் 30 அகதிகள் சாவடைந்தும், நான்கு அகதிகள் காணாமலாக்கப்பட்டும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன