ரஷ்யாவின் செல்வந்த வர்த்தகர் ஒரு
வருக்குச் சொந்தமான சொகுசுப் படகு
ஒன்றை பிரான்ஸின் சுங்க அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர். நாட்டின் தெற்குக்
கரை நகரமான மார்செய்யில் இது நடந்
திருக்கிறது. ரஷ்ய அரசு எரிபொருள் கம்பனியான ரொஸ்நெஃப்ட்டின்(Rosneft)
உரிமையாளருக்குச் சொந்தமான"உண்
மைக் காதல்"("true love") என்னும் 600மில்
லியன் டொலர்கள் பெறுமதியான சொகு
சுப் படகே கைப்பற்றப்பட்டது.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக இந்நடவ
டிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள்
தெரிவித்திருக்கின்றனர்.
உலகெங்கும் ரஷ்யச் செல்வந்தர்கள்
மற்றும் முக்கிய பிரபலங்களின் சொத்
துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன. அமெ
ரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய
நிதி மற்றும் நிறுவனங்கள் பலவற்றுக்கு
எதிராகத் தடைகளை விதித்திருப்பது
தெரிந்ததே. தடைக்கு இலக்கான நிறு
வனங்கள், வங்கிகள் மற்றும் தொழிற்
சாலைகள் அதிபர் புடினுக்கு நெருக்க
மான - அதிகாரச் செல்வாக்குமிகுந்த-
பெரும் புள்ளிகளுடையவையாகும். அவர்களில் பலர் மேற்கு நாடுகளில் தங்கள் சொகுசு பங்களாக்களையும் பெரும் சொத்துக்களையும் வைத்திருக்
கின்றனர்.அவர்களே தற்சமயம் ரஷ்யா மீதான தடைச் சட்டங்களுக்குள் சிக்கிருக்
கின்றனர். பலருடைய கடன் அட்டைகள், வங்கிக் கணக்குகள் கூட முடக்கப்பட்டு
வருகின்றன.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப்
பின்னர் கிரெம்ளினின் அதிகாரச் செல்
வாக்குக்கு உட்பட்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் உலகெங்கும் வர்த்தக நடவடிக்கைகளைத் தங்கள் சுய லாபம் கருதி விரிவுபடுத்தி வருகின்றனர். அத்தகைய பிரபல வர்த்தகப் புள்ளி
களை மேற்குலக ஊடகங்கள் "oligarch"
என்று அழைக்கின்றன