காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் Sevran (93) நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள வீடு இன்றில் குடும்ப வன்முறை இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவ்விடத்துக்கு அதிகாரிகள் மூவர் விரைந்து சென்றனர். நபர் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் மிரட்டிக்கொண்டிருந்துள்ளார்.. அச்சுறுத்தலுக்காக ஐந்து தடவைகள். துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் காவல்துறையினர் தலையிட்டு, ஆயுததாரியை கைது செய்ய முற்பட்டனர். ஆனால் குறித்த ஆயுததாரி அதிகாரிகளில் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அதிகாரி Ballanger மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் RAiD அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு ஆயுததாரி கைது செய்யப்பட்டார்.