எரிபொருளுக்கு விலை குறைப்பு செய்யப்படுவதாக பிரதமர் Jean Castex அறிவித்துள்ளார்.

“ஒரு லிட்டருக்கு 15 சதங்கள் விலைக்குறைப்பு கொண்டுவரப்படுவதாக” பிரதமர் சற்று முன்னர் அறிவித்தார். ஏப்ரல் 1 ஆம் திகதியில் இருந்து இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் எனவும், பிரான்சின் அனைத்து நிலையங்களிலும் 15 சதங்கள் குறைவாக்க எரிபொருளை நிரப்பலாம் என அவர் அறிவித்துள்ளார்.

இந்த விலைக்குறைப்பு நான்கு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும், இதனால் இரண்டு பில்லியன் யூரோக்கள் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

“இந்த விலைக்குறைப்பினால்,60 லிட்டர் கொள்ளவு கொண்ட தாங்கிக்கு 9 யூரோக்கள் சேமிக்க முடியும்! எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.