நேற்று சனிக்கிழமை மாலை Place de la République பகுதியினை பலர் முற்றுகையிட்டு, உக்ரைன்னு ஆதரவாக குரல் எழுப்பினர்.
“நாங்கள் உக்ரைனுக்கு உதவவேண்டும். இரஷ்யாவின் எரிவாயுவையும், எண்ணையையும் புறக்கணிக்க வேண்டும்” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர். Place de la République முற்றுகையிட்ட ஆயிரம் வரையானவர்கள், கைகளில் உக்ரைன் நாட்டு கொடிகளை பிடித்துக்கொண்டு, உக்ரைனுக்கு ஆதரவான கோஷங்களையும் எழுப்பினர்.
“உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் விளாடிமிர் புட்டினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்!” எனவும் அவர்கள் கோஷமிட்டனர். “இன்று மூன்றாவது வாரமாக யுத்தம் இடம்பெறுகின்றது. உக்ரைனிய மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இது எப்போது நிறைவுக்கு வரும் என எங்களுக்குத் தெரியவில்லை!” என ஆர்பாப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.