ஜனாதிபதி வேட்பாளர் Eric Zemmour மீது முட்டை வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை Tarn-et-Garonne மாவட்டத்தில் உள்ள Moissac நகருக்கு பயணமாகியிருந்த போது இந்த எதிர்பாராத தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Eric Zemmour மகிழுந்தை விட்டு இறங்கிய நொடியில், அவரது மகிழுந்தை நெருங்கிய ஒருவர், அவரது தலையில் முட்டை ஒன்றினால் தாக்கியுள்ளார்.தாக்குதல் நடத்தியவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது