பாரிஸில் போதைக்கு அடிமையான ஒருவர் இளம் பெண்ணை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தள்ள முயன்றார். பிப்ரவரி 27, 2019 அன்று, 30 வயதான ஒரு பெண்ணை தண்டவாளத்தில் தூக்கி எறிய முயன்றார்.

2019 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் ஒரு பெண்ணை தள்ளிக் கொல்ல முயன்றதற்காக, நிலையான முகவரி இல்லாத, போதைக்கு அடிமையான ஒரு நபர் புதன்கிழமை விசாரணைக்கு உட்படுத்த பட உள்ளார்.

34 வயதான ஹங்கேரியைச் சேர்ந்த Santra பிளாட்பாரத்தில் மெட்ரோவிற்காக மதியம் 1 மணிக்கு முன்னதாகக் காத்திருந்தார். ரயில் நிலையத்தில் ரயில் நுழையவிருக்கும் போது இந்த இளம்பெண்ணை அந்த நபர் தண்டவாளத்தில் தூக்கி எறிந்தார்.

இளம் பெண்ணை அலறியடித்து தன் கையை நீட்டி உதவி கேட்டார். அருகில் இருந்த ஒரு ஆண் அவருக்கு உதவி செய்து காப்பாற்றினார். ஆனால், அவரது கை மற்றும் முதுகில் சில காயங்கள் ஏற்பட்டது.

இந்த பெண் வீழ்ந்த நான்கு வினாடிகளுக்குப் பிறகு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தாடைந்தது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.