காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை மிரட்டியது.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை Saint-Denis இல் இடம்பெற்றுள்ளது. உள்ளூர் காவல் நிலையம் ஒன்றில் பணிபுரியும் 7 காவலர்களின் படங்கள் அடங்கிய போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
செவ்வாய்கிழமை காலை இந்த சுவரொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சமீப நாட்களாக காவல்துறை அதிகாரிகள் மீது இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.