தமிழீழத் தனியரசுக்காக இறுதிவரை உழைத்தவர் நாட்டுப்பற்றாளர் குயின்ரன் என குறிப்பிட்டு
விடுதலை புலிகளின் மாவீரர் பணிமனையால்
வீர நிலை வழங்கப்பட்டுள்ளது,
கடந்த 5 மார்ச் 2002 அன்றுபிரான்ஸ் தேசத்தில் சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர் அமரர் குயின்ரன்
அவர்களுக்கு தமிழீழத்தின் தேசிய மதிப்பளிப்பு நிலையான நாட்டுப்பற்றாளர் நிலை வழங்கப்பட்டு
மதிப்பளிக்கப்பட்டுள்ளது,
யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகரை சொந்த முகவரியாகவும் பிரான்ஸ் தேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை அன்ரனி என்ற இயற்பெயருடைய நாட்டுப்பற்றாளர் குயின்ரன் அவர்கள்,
1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில்தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டார், யாழ் கோட்டையில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்துறை முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளால் முற்றுகையிடப்பட்டு இருந்தபோது , அந்த முற்றுகையை வீரர்களில் ஒருவராக குயின்ரன் இருந்ததுடன் முன்னேறி வந்த இராணுவத்தை தடுத்து நிறுத்தும் மறிப்புச் சண்டைகளிலும் ஈடுபட்டுள்ளார்,
பின்னர் புலிகள்- இந்திய போர்க்காலத்தில் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த துடன் கடுமையான வன் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்
பின் தாயகத்தை விட்டு வெளியேறி புலம்பெயர் தேசமான பிரான்ஸ் தேசத்திற்கு புலம்பெயர்ந்தார்,
பிரான்சில் இயங்கிய தேசிய கட்டமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்ட இவர் புலம்பெயர் தேசத்திலும் விடுதலையின் பணியை தொடர்ந்தார், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சளைக்காது , இடைவெளியின்றி , இவர் ஆற்றிய விடுதலைப் பணி அளப்பரியது,
இந்நிலையிலேயே கடும் சுகவீனம் காரணமாக கடந்த 5 மார்ச் 2022 அன்று சாவடைந்திருந்தார்,
இவரின் இறுதி நிகழ்வுகள்10 மார்ச் 2022 இன்றைய தினம் மாலை 3 மணியளவில் பரிசின் புறநகர் பகுதியான சென் மிசேல் (saint michel - Sur-0rge ) என்ற இடத்தில் நடைபெற்றிருந்தது,
இதேவேளை தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பொன். நாயகன் தலைமையில் வீரவணக்க கூட்டமும் இடம்பெற்றிருந்ததுடன்,
நாட்டுப்பற்றாளர் குயின்ரனின் புகழ் உடலுக்கு தமிழ் தேசிய மரபுக்கு அமைய வீரவணக்கமும் செலுத்தப் பட்டிருந்தது,
இந்நிகழ்வில் பெருமளவான மக்களுடன் போராளிகளும் தேசிய செயற்பாட்டாளர்களும் இணைந்து தமது வீரவணக்கத்தை செலுத்தி கொண்டார்கள்..