பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவர ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran எச்சரித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. பிரான்சிலும் அதை சூழ உள்ள நாடுகளிலும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. முந்தைய நாட்களோடு ஒப்பிடுகையில் 20% வீதத்தால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது!” என அவர் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை Isère மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த Olivier Véran, அதன்போதே இதனை தெரிவித்தார்.

அதேவேளை, “எளிதில் தொற்றுக்குள்ளாகக்கூடியவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதை தொடரவும்!” எனவும் Olivier Véran தெரிவித்துள்ளார்.