கடந்த நான்கு ஆண்டுகளில் பிரான்சில் 46 பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான பொறுப்பதிகாரி Laurent Nuñez இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளார். கடந்த 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 46 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 37 தாக்குதல்கள் ‘இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுடன்’ தொடர்புடைய தாக்குதல்கள் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, 2021 ஆம் ஆண்டில் எந்த ஒரு தாக்குதல்களுக்கும் திட்டமிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரான்சில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் பிரான்சில் தொடர்ந்தும் உள்ளது எனவும், சிரியா மற்றும் ஈராக்கை தலைமையிடமாக கொண்டு பயங்கரவாதிகள் செயற்பட்டு வருவதாகவும் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.